ஆப்நகரம்

முழு ஊரடங்கில் தளர்வுகள்: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கில் அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் அவை இன்று முதல் நடைமுறைக்கு வந்தன.

Samayam Tamil 13 May 2021, 10:18 am
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதிலும் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.
Samayam Tamil the relaxations announced by the tn govt in the complete lockdown in tamil nadu came into effect today
முழு ஊரடங்கில் தளர்வுகள்: தமிழக அரசு அறிவிப்பு!


ஊரடங்கு விதிக்க வேண்டிய நிர்பந்தம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த சமயம், கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த போது இரு அறிக்கைகளை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின். ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார். இதனால் திமுக ஆட்சிக்கு வந்தால் முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. ஆனால் நிலைமை அவ்வளவு எளிதாக இல்லை. ஊரடங்கு விதிக்கவில்லை என்றால் பாதிப்பின் வேகம் பல மடங்காக உயரும் அபாயம் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்திய நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

எப்படி இருக்கிறது ஊரடங்கு?

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தல், கடுமையான தண்டனைகள் வழங்குவது கடந்த ஆண்டு அதிகம் நிகழ்ந்த சம்பவங்கள் ஆகும். ஆனால் இம்முறை அப்படியான சம்பவங்கள் பெரியளவில் நடைபெறவில்லை. பத்திரிகையாளர்கள் முன்களப் பணியாளர்களின் உரிமைகள் சலுகைகளைப் பெற தகுதியுடையவர்கள் என அறிவித்தது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அத்தியாவசியப் பணிகளுக்கு தடை இல்லை!

இரு மாத மின் கட்டணம் ரத்து? அடுத்து வருமா நச் அறிவிப்பு?

மே 10 முதல் மே 24 வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. மக்கள் அதிர்ச்சியடையா வண்ணம் மே 8, 9 ஆகிய தேதிகளில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. மே 10 முதல் காலை 6 மணியிலிருந்து பகல் 12 மணி வரை காய்கறி, பலசரக்கு ஆகிய அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருக்க உத்தரவிடப்பட்டது. மருந்தகங்கள் வழக்கம் போல் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

எதற்கெல்லாம் அனுமதி?

கொரோனா இழப்பீடு 25 லட்சம் ரூ: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் காய்கறி கடைகளைப் போல பழக்கடைகளை காலை 6 மணி முதல் 12 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா நெருக்கடியின் போது மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே பழக்கடைகளும் கட்டுப்பாடுகளுடன் திறக்க உத்தரவிடப்பட்டது.

நாட்டு மருந்து கடைகளுக்கு அனுமதி!

மருந்தகங்கள் வழக்கம் போல் இயங்கும் நிலையில் நாட்டு மருந்துகடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. நோயிலிருந்து மக்களை மீட்பதில் ஆங்கில மருந்துகளைப் போல நாட்டு மருந்துகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கபசுர குடிநீர் உள்ளிட்ட பல மருந்துகள் மக்களுக்கு நல்ல நிவாரணம் வழங்குவதால் ஆங்கில மருந்தகங்களுக்குள்ள விதிமுறைகள் நாட்டு மருந்துக் கடைகளுக்க்கும் பொருந்தும் என கூறப்பட்டது. இந்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

தொழிற்சாலைகள் இயங்க அனுமதி!

ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடி போட்ட குண்டு: இனி சசிகலா வர வாய்ப்புள்ளதா?

ஊரடங்கில் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்படாமல் தொடர் செயல்பாட்டில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் பல தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்குகின்றன. தொழிலாளர்கள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி