ஆப்நகரம்

சென்னையில் கிடுக்கிப்பிடி, டெல்லியில் பச்சைக்கொடி..! டாஸ்மாக் மீதான தடை நீட்டிப்பு...

மதுக்கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மீதான இடைகாலத்தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

Samayam Tamil 27 Jul 2020, 5:21 pm
கொரோனா பரவலுக்கு நடுவே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மே 7 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக அன்றிலிருந்து சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர பிற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
Samayam Tamil file pic


ஆனால், மது பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் முண்டியடித்து கொண்டு மது பாட்டில்களை வாங்கி செல்வதாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு போடப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், பொதுமுடக்கம் முடியும் வரை மது கடைகளை திறக்கக்கூடாது. சாத்தியமானால் ஆன்லைனில் விற்பனை செய்துகொள்ளுங்கள் என அரசுக்கு உத்தரவிட்டது.

அந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

OBC reservation: சொன்னதை செய்யுங்க... மேல்முறையீடு கூடாது: பாமக நிறுவனர் இராமதாஸ்

இந்நிலையில், மீண்டும் இன்று உச்ச நீதிமன்றத்துக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமுடக்க காலத்தில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை மூட வேண்டுமென்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான இடைகாலத்தடை மீண்டும் தொடரும் என உத்தரவிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி