ஆப்நகரம்

ஆண்டுக்கு 1.34 லட்சம் பேர் சாலை விபத்தில் பலி..! மது போதையில் சிக்கினால் விடாதீங்க.. : நீதிமன்றம் அதிரடி..

இந்தியாவில் மது குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

Samayam Tamil 25 Oct 2019, 5:02 pm
இந்தியாவில் புதிய மோட்டார் வாகன சட்டமானது கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் பெரும் அபராதங்களை வசூலித்து வருகின்றனர்.
Samayam Tamil 4


இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்த விசாரணையின் போது, மது அருந்திவிட்டு சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஒருவரது இழப்பீடும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற சண்முகம் என்பவரின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சண்முகம், 2 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு, மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார்.

தீபாவளி மற்றும் அடுத்த 3 நாட்களுக்கும் டாஸ்மாக் கடைகள் விடுமுறை: மதுரை ஆட்சியர் அதிரடி

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சண்முகத்துக்கு விபத்து இழப்பீடாக 39,500 ரூபாயை வழங்க உத்தரவிட்டது. ஆனால் இதை ஏற்காத சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அதற்கு பதிலளித்த யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், விபத்தின் போது இரு சக்கர வாகனத்தில் வந்த சண்முகம், மது போதையில் இருந்ததாக தெரிவித்தது.

இதை உறுதி படுத்திக்கொண்ட நீதிமன்றம், சண்முகத்துக்கு அறிவிக்கப்பட்ட 39,500 ரூபாய் இழப்பீடு தொகையையும் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இந்தியாவில் ஆண்டுக்கு 1.34 லட்சம் பேர் சாலை விபத்தில் உயிரிழப்பதாகவும், அதில் 70 சதவீதம் பேர் குடிபோதையில் இருப்பதாகவும் தெரிவித்தது.

இதனால், மதுகுடித்து விட்டு வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மோட்டார் வாகன சட்டத்தில் அதற்கு திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கார் விபத்தில் சிக்கி இழப்பீடு பெற முயற்சித்த சண்முகம் மது போதையில் வண்டியை ஓட்டி வந்த சம்பவம், உயர் நீதிமன்றத்தில் அம்பலமாகியுள்ளது. இதனால் தீர்ப்பாயம் அறிவித்த இழப்பீட்டு தொகையையும் அவர் இழந்துள்ளார்.

அடுத்த செய்தி