ஆப்நகரம்

இரு அணிகளும் இணையும்: முதல்வர் அறிவிப்பு

அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சியுடன் தெரவித்துள்ளார்.

TNN 19 Aug 2017, 4:16 pm
அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சியுடன் தெரவித்துள்ளார்.
Samayam Tamil the two sides will merge chief ministers announcement
இரு அணிகளும் இணையும்: முதல்வர் அறிவிப்பு


சசிகலா குடும்பத்தால் அதிமுக கட்சிகள் உடைந்துள்ள நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சியுடன் தெரவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, இரு அணிகளுக்குள்ளும் சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், தற்போது பேச்சுவார்ததைகள் மூலம் பிரச்னைகள் தீர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாகம செய்தியாளர்கள மத்தியில் பேசிய பன்னீர் செல்வம் தற்போது சுமூக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், அதிமுக தொண்டர்கள், தமிழக மக்கள் விருப்பப்படி இரு அணிகளும் விரைவில் இணையும் என்றும் கூறினார். இது குறித்து ஒரிரு நாட்களில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி