ஆப்நகரம்

யாஸ் புயல்: தமிழகத்தில் எங்கெல்லாம் மழை?

வங்கக் கடலில் இன்று யாஸ் புயல் உருவாகிய நிலையில் தமிழகத்தின் வானிலை நிலவரத்தை அறிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 24 May 2021, 9:11 am
மத்திய கிழக்கு வங்க கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு இன்று (24ஆம் தேதி) புயலாக உருவானது. இந்தப் புயலுக்கு யாஸ் எனப் பெயரிடப்படுகிறது.
Samayam Tamil yaas cyclone


புயல் மேலும் வலுவடைந்து 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும். வடக்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வடக்கு ஒரிசா - மேற்கு வங்கத்துக்கும் இடையே கரையை நாளை மறுநாள் (மே 26) கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (மே 24) கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிரமான முழு ஊரடங்கு அமல்: தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

பாஜகவுக்கு பறக்கும் ராஜேந்திர பாலாஜி? மோடியின் மகனுக்கு இப்படியொரு ஸ்கெட்ச்!

தமிழக கடலோர பகுதி, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதி, ஆந்திர கடலோரப் பகுதிகளில் இன்று பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு வங்க கடல், ஒடிஷா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அடுத்த செய்தி