ஆப்நகரம்

பத்திாிகை கொடுக்க சென்ற மணப்பெண் சாலை விபத்தில் பலி

திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற திருமணப்பெண் சாலை விபத்தில் உயிாிழந்த சம்பவம் திருவள்ளூா் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 17 Aug 2017, 9:23 pm
திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற திருமணப்பெண் சாலை விபத்தில் உயிாிழந்த சம்பவம் திருவள்ளூா் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil the young lady died in road accident
பத்திாிகை கொடுக்க சென்ற மணப்பெண் சாலை விபத்தில் பலி


திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வேலகாபுரம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் தனலட்சுமி (24). இவருக்கும், ஊத்துக்கோட்டை அருகே காசிரெட்டிபேட்டையை சேர்ந்த மார்ட்டினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதன்படி இவர்களுக்கு வரும் 23ம் தேதி ஊத்துக்கோட்டையில் திருமணம் நடக்க இருந்தது. இதையடுத்து இன்று காலை தனது தோழிகளுக்கு அழைப்பிதழை வழங்குவதற்காக உறவினர் ஒருவரின் பைக்கில் தனலட்சுமி எர்ணாகுப்பத்திற்கு சென்றார்.

எர்ணாகுப்பம் அருகே வந்தபோது பெரிய பாளையத்தில் இருந்து தாமரைப்பாக்கம் நோக்கி சென்ற லாரி, அவரது பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தனலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பைக்கை ஓட்டி வந்த உறவினர் காயமின்றி உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் காவல் துறையினருடன் சம்பவ இடத்திற்கு சென்று தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். திருமணம் நடைபெற இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் சாலை விபத்தில் மணப்பெண் உயிாிழந்தது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The young lady died in road accident

அடுத்த செய்தி