ஆப்நகரம்

மீண்டும் திறக்கப்படும் சினிமா தியேட்டர்: டிக்கெட் விலை அதிரடி குறைப்பு!

புதுச்சேரியில் அக்டோபர் 15ஆம் தேதி முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுவதால் டிக்கெட் கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 11 Oct 2020, 3:21 pm
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. இதன் விளைவாக புதிய படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலுக்கு தீர்வுகாணும் நோக்கில் சில படங்கள் ஓடிடி தொழில்நுட்பத்தில் ஆன்-லைனில் ரிலீஸ் செய்யப்பட்டன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனிடையே, கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த பொது முடக்கம் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பொது முடக்கத்தை நீட்டித்துள்ள மத்திய அரசு, UNLOCK 5.0இன் கீழ் பல்வேறு தளர்வுகளையும் அளித்துள்ளது.

அதன்படி, திரையரங்குகள் 50 சதவீதம் இருக்கைகளுடன் அக்டோபர் 15ஆம் தேதி முதல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தாயைத் தெருவில் நிறுத்திய மகன், சொத்தை பறித்த அதிகாரி!

அந்த வகையில், புதுச்சேரியில் அக்டோபர் 15ஆம் தேதி முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. அதையொட்டி, புதுச்சேரியில் தியேட்டர் டிக்கெட் கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.120 டிக்கெட் ரூ.100 ஆகவும், ரூ.100 டிக்கெட் ரூ.75 ஆகவும் குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும், பார்க்கிங் கட்டணம் கார்களுக்கு ரூ.50லிருந்து ரூ.30 ஆகவும், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.20லிருந்து ரூ.10 ஆகவும் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி