ஆப்நகரம்

சுர்ஜித்: ஆழ்துளை கிணறுகளை முட வலியுறுத்தும் கலெக்டர்கள்!

தேனி, வேலூர் மாவட்டங்களில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட அந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Samayam Tamil 26 Oct 2019, 10:25 am
பெரும் விபத்துக்கள் நடந்தால்மட்டுமே அதற்கு காரணமாக இருந்த தவறுகள் சரிசெய்யப்பட அதிகாரிகள் ஆர்வம் காட்டுவது தொடர்ந்து வருகிறது. ஆழ்துளை கிணறுகள் விஷயத்திலும் அதுவே நடைபெற்றுவருகிறது.
Samayam Tamil Untitled collage (9)


சுர்ஜித்: மீட்பு பணி மிகுந்த சவாலாக உள்ளது - விஜயபாஸ்கர்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் நேற்று மாலை இரண்டரை வயது சிறுவன் சுர்ஜித் அங்கு பராமரிக்கப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். அவனை மீட்க பல்வேறு முயற்சிகள் 17 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

சிறுவன் சுர்ஜித்தை மீட்க 15 மணி நேரமாக தொடரும் போராட்டம்!

தமிழ்நாட்டில் இதுபோன்று பல இடங்களில் பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து உயிரிழந்துள்ளனர். சில நேரங்களில் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளனர். அத்தகைய சம்பவங்கள் நடைபெறும்போது உடனடியாக வேறு எங்கும் இது போன்ற ஆழ்துளை கிணறுகள் இருந்தால் அதை மூட உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். தற்போதும் இதே போன்று வேலூர், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் மாவட்டத்தில் உபயோகத்தில் இல்லாத பராமரிக்கப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரமே திறந்த நிலையில் இருந்த ஆழ்துளைக் கிணறுகள் பல இடங்கலில் மூடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை.. பதைபதைக்கும் வீடியோ..!

தேனி மாவட்டத்தில் திறந்தநிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டனவா என்பதை வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த இரு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் இனிமேல் இதுபோன்ற ஒரு விபத்து ஏற்படுவதற்கு முன்னால் அனைத்து மாவட்டங்களிலுள்ள பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளும் மூடப்படவேண்டும் என்பதே பொதுமாக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அடுத்த செய்தி