ஆப்நகரம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 17 Mar 2018, 10:03 pm
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil there is a chance for heavy rain in tamilnadu and puducherry
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!


இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது; ''லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்துவிட்டது. மேலும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் கர்நாடக மாநிலத்தை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அதனுடன் தொடர்புடைய மேற்கு திசைக் காற்றும், வங்கக் கடல் பகுதியில் இருந்து வீசும் ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி தென்னிந்திய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் வட தமிழகத்தில் பரவலாகவும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

அடுத்துவரும் 24 மணிநேரத்தில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு சில முறை லேசான மழை பெய்யக் கூடும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி