ஆப்நகரம்

தமிழகம், புதுவையில் அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் உள் பகுதி முதல், தென்னிந்திய பகுதிகள் முழுவதும் நிலப்பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருகிறது. அதன் காரணமாக தமிழக பகுதிகளில் வெப்பசலன மழை பெய்வதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

Samayam Tamil 13 Jul 2019, 2:23 pm
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil தமிழகம், புதுவையில் அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழகம், புதுவையில் அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!


இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் உள் பகுதி முதல், தென்னிந்திய பகுதிகள் முழுவதும் நிலப்பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருகிறது. அதன் காரணமாக தமிழக பகுதிகளில் வெப்பசலன மழை பெய்வதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

அதனால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும். நாளை (ஜூலை-14-) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. மேலும் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்ஸியஸாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸாகவும் பதிவாகும்.

சென்னையில் நேற்று இரவு, சென்னையில் கிண்டி, தியாகராய நகர், வளசரவாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம், குடுமியான்மலை, பெரு மாநாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நேற்று சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் 3 செமீ, கடலூர் மாவட்டம் பண்ருட்டி, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை, வேலூர் மாவட்டம் மேல் ஆலத்தூர் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி