ஆப்நகரம்

தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் குளிர்ச்சி தகவல்!

தமிழகத்தின் இதர பகுதிகள், ராயலசீமா மற்றும் ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழைதொடங்கியுள்ளது.

Samayam Tamil 22 Jun 2019, 8:39 am

ஹைலைட்ஸ்:

  • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு
  • சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் ஓரிரு முறை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் குளிர்ச்சி தகவல்!
தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் குளிர்ச்சி தகவல்!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், வரும் தினங்களுக்கு சென்னை, புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடங்கிய தென் மேற்கு பருவ மழையின் வடதிசை நகர்வு வாயு புயல் காரணமாக தடைப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தின் இதர பகுதிகள், ராயலசீமா மற்றும் ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழைதொடங்கியுள்ளது.

இதன் காரணமாக திருநெல்வேலி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் ஓரிரு முறை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்து வரும் இரு தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்குப் பருவநிலை நகர்ந்துள்ள நிலையில், வெப்பம் குறையத் தொடங்கும்.

சென்னையில் வெப்பநிலை தற்போது 38 டிகிரியாகக் குறைந்துள்ளது. இனி படிப்படியாகக் குறைந்து மிதமான வெப்பம் நிலவும். அடுத்து வரும் நாள்களில் மாநிலத்தின் பிற இடங்களில் வெப்பநிலை படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் ஜூன் 1 முதல் இதுவரை இயல்பான மழை அளவு 39. 6 மில்லிமீட்டர் என்ற நிலையில், இதுவரை 24 புள்ளி 8 மில்லிமீட்டர் மழை மட்டுமே பெய்திருக்கிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன. பூண்டி ஏரியில் மட்டும் 22 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இதனை இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும். இதைத் தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்தும் தண்ணீர் பெற முடியாது. இதனால் மழையை எதிர்நோக்கி சென்னைவாசிகள் காத்திருக்கின்றனர்.

அடுத்த செய்தி