ஆப்நகரம்

சபாநாயகர் பதவிக்கு சிக்கல்? அதிமுக போடும் ஸ்கெட்ச் - என்ன செய்ய போகிறார் அப்பாவு?

சபாநாயகர் பதவியில் அப்பாவு நீடிப்பதற்கு சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 2 Oct 2021, 1:11 pm
திமுக அமைச்சரவையில் சில அமைச்சர்கள் தங்கள் அதிரடி செயல்பாடுகளால் கவனம் பெற்றனர். அதேபோல் சபாநாயகர் அப்பாவும் சட்டப்பேரவை நடைபெறும் நாள்களில் பேசுபொருளானார்.
Samayam Tamil appavu mk stalin


நெல்லைத் தமிழில் மிக இயல்பாக அவையை வழிநடத்தியது, சபாநாயகர் என்றால் இயந்திரத் தனமாக, இன்னார் பேசுங்கள் இன்னார் வெளியே செல்லுங்கள் என கூறாமல் லேசான கிண்டலுடன் தனது பேச்சை அமைத்துக் கொண்டது என அப்பாவு பல சமயங்களில் ஸ்கோர் செய்தார். முக்கியமாக பாஜக உறுப்பினர்களுடன் விவாதம் எழும் போது அப்பாவு கிண்டல் பேச்சு சற்று தூக்கலாகவே இருக்கும்.

2016 தேர்தலில் அவர் சட்டமன்றத்துக்குள் நுழைய முடியாமல் போன நிலையில் தற்போது சபாநாயகராக அவையை வழிநடத்துகிறார். இந்நிலையில் அவரது சபாநாயகர் பதவிக்கு சிக்கல் உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஸ்டாலினுக்கு சிகிச்சை: சென்னை வரும் லண்டன் மருத்துவர்கள்?
அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளை நடத்தி வருகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி என அடுத்தடுத்து ரெய்டுகள் நடைபெறுகின்றன. அடுத்து யார் இடத்தில் ரெய்டு என்பது தான் அதிமுக மேல் மட்டத்தில் பேசப்படும் ஹாட் டாபிக்காக உள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் மீண்டும் கிளம்ப எடப்பாடி பழனிசாமியும் விழி பிதுங்கியிருக்கிறாராம். இந்த சூழலில் திமுகவுக்கு எப்படி குடைச்சல் கொடுக்கலாம் என அதிமுகவும் யோசித்து வருகிறது.

திமுக அமைச்சர்கள் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் ஆட்சி அவர்களது கையில் இருக்கும் போது ஒன்றும் செய்வதற்கில்லை. இந்த சூழலில்தான் சபாநாயகரை அதிமுகவினர் குறிவைத்துள்ளனர்.
சபாநாயகர் மீது ஏற்கனவே மறியல், போராட்டம், பஞ்சாயத்து, மணல் விவகாரம் என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் சில வழக்குகளில் எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டால் அவரால் சபாநாயகர் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்படும் என்கிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு வெற்றி? உளவுத் துறை ஸ்டாலினுக்கு கொடுத்த ரிப்போர்ட்!இதை பயன்படுத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் முயற்சியில் அதிமுகவினர் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்த சபாநாயகர் தரப்பு சட்ட ஆலோசனைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அடுத்த செய்தி