ஆப்நகரம்

தமிழ்நாட்டில் தள்ளிப்போகுமா பள்ளிகள் திறப்பு.? அரசு எடுக்கப்போகும் முடிவென்ன..

தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமாகி வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை அரசு ஒத்திவைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 25 May 2023, 4:42 pm
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருந்து வருகிறது. பொதுமக்கள் காலை 9 மணிக்கு மேல வெளியில் செல்லவே அஞ்சுகின்றனர். வேலைக்கு சென்று வருபவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு 'வொர்க் ப்ரம் ஹோம்' கொடுத்து வருகின்றன. அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என்றும் வானிலை முன்னறிவிப்பு கூறுகிறது.
Samayam Tamil tn school open


இந்த நிலையில் ஜூன் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஏற்கனவே கோடை வெயிலால் பகல் நேரத்தில் பிள்ளைகள் வெளியே சென்றும் விளையாட முடியாமலும் இரவு நேர புழுக்கத்தால் நிம்மதியாக தூங்க முடியாமலும் இருக்கின்றனர். இதற்கு மத்தியில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து ஜூன் 5 ஆம் தேதி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்த அறிவிப்பை பரிசீலினை செய்யக்கோரி தற்போது அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இளைஞர்களே கோடை வெயிலுக்கு நொந்துவிடும் போது பள்ளி பிள்ளைகளின் கதி என்னாகும் என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.

அண்மையில் பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோர் வெளியிட்டிருந்த அறிக்கையில், கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க முடியாமல் வயது நிரம்பியவர்களே திணறி வருவதன் காரணமாக, வாய்ப்புள்ள பல தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணி புரியவும் அனுமதித்துள்ளன. அதுமட்டுமன்றி கொரோனோ நோய்த்தொற்றுப் பரவலும் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.

"எதே.. எனக்கு வெறி பிடிச்சிருக்கா..?" யார் சொன்னது.. அப்படில்லாம் கிடையாது.. தமிழிசை 'சுளீர்'

ஆனால், இவற்றையெல்லாம் கவனத்திற்கொள்ளாமல் மாணவர் சேர்க்கை என்ற பெயரில் பகற்கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து தமிழ்நாடு அரசு ஜூன் 1 முதல் பள்ளிகளைத் திறக்க முடிவெடுத்திருப்பது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும். அரசின் சிறிதும் பொறுப்பற்ற இம்முடிவு மாணவர்களின் உடல் மற்றும் மன நலனில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே பள்ளிகள் திறப்பை 15 நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் முதல்வர் அறிவுறுத்தல்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். தற்போது முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளதால் இங்குள்ள அமைச்சர்களும், கல்வித்துறை அதிகாரிகளும் கோரிக்கை வைத்தால் பள்ளி திறப்பு தேதி மாற்ற வாய்ப்புண்டு என்கின்றனர்.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி