ஆப்நகரம்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 17 Apr 2018, 1:19 pm
வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil rain 1
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். பகலில் அடித்த வெப்பத்தின் காரணமாக, இரவில் வீசும் அனல்காற்றால், இரவு தூங்க முடியாத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்தது.

அந்தவகையில் இன்றும் வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொருத்தவரை வானம் தெளிவாக காணப்படும் என்றும், அதிகப்பட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என்றும் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்ததில் அதிகபட்சமாக தேனி போடிநாயக்கனூரில் 10 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் கூடலூரில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி