ஆப்நகரம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 19 May 2018, 4:13 pm
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil rain
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!


இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வரும் 23ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது. தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதியிலும், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சிவகங்கையில் 9 செ.மீ., குமரி மாவட்டம், குளச்சலில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் காணப்படும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி