ஆப்நகரம்

நாளை முதல் மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து; மதுரை மக்களுக்கு ரூ.1,000 நிவாரணம்!

கொரோனாவை கட்டுப்படுத்த நாளை முதல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு சென்றால் இ-பாஸ் கட்டாயம் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

Samayam Tamil 24 Jun 2020, 9:56 pm
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி சுமார் 4 மணி நேரம் காணொளி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் முதல்வருக்கு விளக்கினர். அதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
Samayam Tamil முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி


அதன்பின்னர், கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வருகிற 25.6.2020 முதல் 30.6.2020 வரை வாகனப் போக்குவரத்தில் மண்டல முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதில் மாவட்டத்தில் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என்றும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெறவேண்டும் என்றும் அரசு முடிவு செய்துள்ளது. மேற்குறிப்பிட்ட காலத்தில், பொதுப் பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்குள் மட்டும் செயல்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகன போக்குவரத்துக்கும் பொருந்தும்.

தற்போது வாகனப் போக்குவரத்துக்கு மண்டல முறை அமலில் உள்ளதால், மண்டலங்களின் பிற மாவட்டங்களிலிருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு, நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. இதனால் மக்களின் பயணங்களை தடுக்க இயலவில்லை. எனவே, வாகனப் போக்குவரத்தில் மண்டல முறைக்கு பதில், இ-பாஸ் இல்லாமல், மாவட்டத்திற்குள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். வேறு மாவட்டங்களுக்கு செல்லவோ, பிற மாவட்டங்களிலிருந்து வரவோ இ-பாஸ் பெற்றே பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியர்களின் கருத்து ஏற்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்படும் மாவட்ட எல்லைகள்; பேருந்து போக்குவரத்து ரத்து!

மேலும், மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்குட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்து பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் உத்தரவு


முதல்வர் உத்தரவு


இந்த ஊரடங்கு சமயத்தில் ஏழை எளிய மக்ளின் சிரமங்களை குறைக்க, சென்னையில் வழங்கியதுபோல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் குடும்பத்திற்கு தலா 1,000 ரூபாய் வழங்கவும் அதை செயல்படுத்தும் விதமாக, வரும் 27.6.2020 முதல் சம்மந்தப்பட்ட துறையினர் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று, ரொக்க நிவாரணத்தை வழங்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி