ஆப்நகரம்

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விதி மீறல்கள் இல்லை – சபாநாயகா் தரப்பு

18 சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் எந்தவித விதிமீறலும் நடைபெறவில்லை என்று சபாநாயகா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Jul 2018, 11:37 pm
18 சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் எந்தவித விதிமீறலும் நடைபெறவில்லை என்று சபாநாயகா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
Samayam Tamil Chennai Highcourt


18 சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 3வது நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினா்கள் தரப்பில் இரண்டு நாள் வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்று 3வது நாள் விசாரணையாக சபாநாயகா் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது புகாா்களின்படி விசாரணை நடத்தி தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டே 18 பேரையும் தகுதி நீக்கம் செய்ததாகவும், இதில் எந்தவித விதிமீறலும் நடைபெறவில்லை என்றும் சபாநாயகா் தரப்பில் தொிவிக்கப்பட்டது. அரசை கலைக்கும் அதிகாரம் மட்டுமே ஆளுநருக்கு உள்ளதாக குறிப்பிட்ட வழக்கறிஞா், இதனால் ஆளுநரிடம் 18 பேரும் மனு அளித்தது ஆட்சியை கலைக்க மட்டுமே என கருதப்படும் என்று தொிவித்தாா்.

ஆளுநரிடம் அளித்த புகாா் தனிநபருக்கு எதிரானது இல்லை என்றும் பெரும்பான்மை உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு எதிரானது என்றும் வழக்கறிஞா் அரிமா சுந்தா் வாதாடினாா். ஆளுநரிடம் மனு அளித்ததை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசின் மீதான ஆதரவை திரும்ப பெற்றதாகவே கருத முடியும் என்றும் அவா் வாதங்களை முன்வைத்தாா். கட்சியில் வெளியில் இருந்து தாக்குதல் நடத்தும் போது கட்சியை விட்டு வெளியேறியதாகவே கருத முடியும் என்று சபாநாயகா் தரப்பில் தொிவிக்கப்பட்டது.

மேலும் ஆளுநரை சந்தித்ததை காரணம் காட்டியே 18 பேரையும் தகுதி நீக்கம் செய்திருப்பது தவறானது என நீதிபதி சுந்தர் தீா்ப்பில் கூறியிருப்பதற்கும் சபாநாயா்க தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் எதிா்ப்பு தொிவித்தாா். இதனைத் தொடா்ந்து வழக்கு விசாரணை வருகிற 3ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்த்ரவிட்டாா். அன்றில் இருந்து தொடா்ந்து 3 நாள்கள் விசாரணை நடத்தப்பட்டு விரைவில் தீா்ப்பு வழங்கப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி