ஆப்நகரம்

'மாட்டு கறி தின்றால் தாழ்த்தப்பட்டவன், மாட்டு மூத்திரம் குடிக்கிற நீ உயர்ந்தவனா'? - சீமான்

திருமாவளவன் பெண்களுக்கு எதிராக பேசவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து.

Samayam Tamil 27 Oct 2020, 4:59 pm
மனுஸ்மிருதி நூலில் பெண்களை குறித்து இழிவாக எழுதப்பட்டுள்ளதாக விசிக கட்சி தலைவர் அதனை சுட்டிக்காட்டி பேசியற்கு மாநிலம் முழுவதுமுள்ள பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து திருமாவளவன் மீது குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil file pic


அதே சமயம், திருமாவளவன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அதனடிப்படையில் அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக பெண்கள் அமைப்பை சார்ந்தவர்களும் எதிரிக்கு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், திருமாவளவன் எதிராக எழுந்துள்ள கண்டனங்களை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு பதிலளித்த சீமான், '' மனுஸ்மிருதி புத்தகத்தில் எழுதியுள்ளதை தான் திருமாவளவன் மேற்கோள்கட்டி கூறியிருக்கிறார். எங்கள் குல பெண்களை இழிவுபடுத்தி பேசும் எந்த புத்தகமும் எங்களுக்கு புனிதமாகவோ, வேதமாகவோ இருக்க முடியாது. இதையே நான் சொல்லிருந்தாலோ இப்படித்தான் எதிர்ப்பார்கள். நடக்காத ஒன்றையா நாங்கள் பேசுகிறோம். இப்படி பாஜகவினர் எதிர்ப்பதனால் திருமாவளவன் பின் வாங்கப்போவதில்லை.

ஒன்ஸ் மோர்!! சீனியர் நடிகை என்றும் பாராமல் குஷ்புவை இப்படி செய்யலாமா?

அவரே அதை விட்டாலும் நாங்கள் விட மாட்டோம் என கூறினார். தொடர்ந்து மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ள கருத்தை திருமாவளவன் தவறாக புரிந்துகொண்டார் என குஷ்பு குற்றம் சாட்டுவதை எப்படி பார்க்குறீர்கள் என கேட்டதற்கு, '' மனு தருமத்தை எழுதும்போது குஷ்பு உடன் இருந்தார்களா? இதே குஷ்பு கடந்த வாரம் காங்கிரசில் இருந்த போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பாரா? திருமாவளவன் உண்மையில் பெண்களுக்கு ஆதராவாகத்தான் பேசியுள்ளார்.

வேண்டுமானால் மனு தருமத்தை குறித்து விவாதம் நடத்துவோம். அதிலுள்ள வாசகங்களை ஒவ்வொன்றாக படித்து காட்டுவோம்.இந்தியாவில் மட்டும்தான் நெய் எரிக்கப்படுகிறது, பால் கொட்டப்படுகிறது, மூத்திரம் குடிக்கப்படுகிறது. மாட்டுக்கறி சாப்பிடும் நான் இழி மகன், தாழ்ந்த சாதி, ஒதுக்கப்பட்டவன் என்றால் மாட்டு மூத்திரம் குடிக்கிற நீ உயர்ந்தவனா? என இவ்வாறு சீமான் கூறினார்.

அடுத்த செய்தி