ஆப்நகரம்

Karnataka Election: மத அரசியலுக்கு சம்மட்டி அடி.. இனியாவது பாஜக திருந்த வேண்டும்.. திருமாவளவன் 'சுருக்'

கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்திருப்பது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 13 May 2023, 1:53 pm
சென்னை: கர்நாடகா மக்கள் பாஜகவுக்கு சம்மட்டி அடி கொடுத்து துரத்தி இருக்கிறார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
Samayam Tamil thiruma


தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களிலேயே பாஜகவை கடுமையாகவும், நேருக்கு நேராகவும் எதிர்க்கும் தலைவர் திருமாவளவன் தான். பாஜக இருக்கும் எந்தக் கூட்டணியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என அவர் சமீபத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், எதிர் அணியில் இருந்தபோதும் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ளுமாறு அதிமுகவுக்கு அடிக்கடி அறிவுறுத்தி வருபவர் திருமாவளவன்.
600/600.. சாதித்தது எப்படி.. இதுவரை சொல்லாத ஒற்றை சீக்ரெட்.. டிஜிபி சைலேந்திர பாபுவிடம் பகிர்ந்த நந்தினி..
இந்நிலையில், கர்நாடகா தேர்தலில் பாஜக தோல்வி அடைந்திருப்பதை வரவேற்பதாக திருமாவளவன் கூறி இருக்கிறார். கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி அடைவது உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் 129 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 113 இடங்களை கைப்பற்றினாலே பெரும்பான்மையை பெற்றுவிடலாம் என்கிற சூழ்நிலையில், அதைவிட அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், கர்நாடகா தேர்தல் முடிவுகள் குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "மத அரசியல் செய்து எந்த மாநிலத்திலும் வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கும் பாஜகவுக்கு கர்நாடகா மக்கள் சம்மட்டி அடி கொடுத்து துரத்தி இருக்கிறார்கள். கர்நாடகாவில் பாஜக தோல்வி அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் பாஜக இருக்கக்கூடாது என கர்நாடகா தேர்தல் பிரச்சாரங்களில் நான் பேசி இருந்தேன். அதுபோல, தெற்கில் அவர்கள் காலூன்றி இருந்த ஒரே ஒரு மாநிலத்தில் இருந்தும் பாஜக அகற்றப்பட்டு இருக்கிறது.

தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறார். அதே நேரத்தில், இனிமேல்தான் காங்கிரஸ் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆட்சியை பிடிக்க எந்தக் குறுக்கு வழியிலும் பாஜக செல்வார்கள். எனவே மிகவும் கவனமாக காங்கிரஸ் இருக்க வேண்டும். பெரும்பான்மை மக்களுக்கு சாதகமாக இருப்பதாக காட்டிக்கொண்டு மத ரீதியான மோதல்களையும், கலவரங்களையும் தூண்டி வரும் பாஜக, இந்த தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இனியாவது திருந்தி, மத அரசியலை பாஜக கைவிட வேண்டும்" என திருமாவளவன் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி