ஆப்நகரம்

பட்டியலின மக்களை மறந்த திருமா? பிக்பாஸ்க்கு வாக்கு சேகரிப்பு.. கொதிக்கும் நெட்டிசன்கள்

புதுக்கோட்டை நீர்த்தேக்க தொட்டி விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் செயல்பட்டால் நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 19 Jan 2023, 4:39 pm
ள்புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த நீரை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி பல்வேறு நபர்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.
Samayam Tamil tirumavalavan


இந்த நிலையில், இக்கொடூர சம்பவத்தை அரங்கேற்றியவர்களை கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மீது போலீசார் குற்றம் சுமத்துவதாக பரபரப்பான குற்றசாட்டுகள் எழுந்தன. தலித் தரப்பில் விசாரணை என்கிற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மலத்தை வரைந்து காட்டுங்கள் என்றும் நீங்களே மலத்தை கொட்டிவிட்டு அடுத்தவர்கள் மேல் பழி போடுகிறீர்களா என்று கேட்டு போலீசார் கொடுமை செய்துள்ளதாகவும் எவிடென்ஸ் அமைப்பு குற்றம்சாட்டியது.

ஆனால், இந்த விவகாரத்தில் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக உரிமை குரல் கொடுக்க திருமாவளவன் தடுமாறிவிட்டதாக பார்க்கப்படுகிறது. தலித் ஆணவக்கொலையை காட்டிலும் குடிக்கும் குடிநீரில் ஆதிக்க சமூகத்தினர் மலத்தை கழித்து வக்கிரத்தை வெளிப்படுத்தியது வளர்ந்த தமிழ்நாட்டின் அவமானம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு சிறிய கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் இன்னமும் கைது செய்யாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி ஆழமாக எழுகிறது. இந்த கேள்வியை அரசுக்கு எதிராக கேட்கும் கடமையில் உள்ள திருமாவளவன் அமைதி காக்கிறார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொடுள்ள விக்ரமனுக்கு வாக்கு செலுத்தி வெற்றி பெற செய்ய வேண்டும் என்று திருமாவளவன் ட்வீட் போட்டிருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.


நெட்டிசன்கள் பலர், வேங்கைவயலில் குடிநீரில் மனிதக் கழிவைக் கலந்த குற்றவாளிகளைக் கண்டித்து கைதுசெய்ய போராட்டத்தை அறிவிக்கும் திருமாவளவன், இந்த அவலத்தை கண்டித்து தன் கட்சி எம்எல்ஏக்களை சட்டசபையில் ஏன் பேச சொல்லவில்லை? சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவராதது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஆமை வேகத்தில் செயல்பட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நேற்று முதல் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதியில் உள்ள தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறையை முழுமையாக ஒலிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இருப்பினும் இந்த விவகாரத்தில் திருமாவளவன் மீது பாதிக்கப்பட்ட மக்களில் பலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி