ஆப்நகரம்

திருமா பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் - சசிகலா புஷ்பாவும் கொந்தளிப்பு

பெரியாரும் இந்திய அரசியலும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பெண்களை குறித்து இழிவாக பேசியதாக விசிக கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பாஜகவை சேர்ந்த சசிகலா புஷ்பா கண்டனம் தெரிவித்துளார்.

Samayam Tamil 24 Oct 2020, 7:18 pm
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Samayam Tamil file pic


இந்த நிலையில் அவர் மீது சைபர் கிரைம் போலீசார், ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரசை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விழுப்புரத்தில் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துகுடி பாஜக நிர்வாகியான சசிகலா புஷ்பா திருமாவளவனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சசிகலா புஷ்பா கூறியதாவது, ''திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இந்து பெண்களை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.

திருமாவுக்கு துணை நிற்கும் ஸ்டாலின்: மதவெறியர்களின் ஆசை நிச்சயம் நிறைவேறாது!

ப.சிதம்பரம் ட்வீட்

திமுகவில் கடவுளை வழங்கும் இந்து பெண்கள் ஏராளம் பேர் உள்ளனர். அப்படி எனில் திருமாவளவனின் இந்த பேச்சு அவர்களையும் இழிவுபடுத்துவதாக ஆகும். எனவே திருமாவளவனின் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?. அவருடைய இந்த அநாகரிகமான பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவேண்டும். திருமாவளவனும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்'' என இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி