ஆப்நகரம்

எளிய மக்கள் மீது மோடி அரசு தாக்குதல்: திருமாவளவன் கண்டனம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் எளிய மக்கள் மீது மோடி அரசு தாக்குதலை தொடுத்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 14 Jun 2020, 8:52 pm
கொரோனா நோய்த்தொற்றுப் பாதிப்பின் காரணமாக பொருளாதார நெருக்கடிக்கு பொதுமக்கள் ஆளாகி இருக்கும் சூழலில், தமிழக அரசு பெட்ரோல் டீசல் மீதான 'வாட்' வரியை உயர்த்தியுள்ளது.
Samayam Tamil திருமாவளாவன்
திருமாவளாவன்


தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி உயர்வு, மத்திய அரசின் தொடர் விலையேற்றம் என்ற இருமுனை தாக்குதலால் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சா எண்ணெய்யின் விலை உலகசந்தையில் வெகுவாக குறைந்துள்ள நிலையிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே உள்ளது. முழுஅடைப்பால் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் எளிய மக்கள் மீது இத்தாக்குதலைத் தொடுத்துள்ளது மோடி அரசு என சாடியுள்ளார்.

நரேந்திர மோடிக்கு ஏன் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்?

அத்துடன், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி