ஆப்நகரம்

கொரோனாவுடனான போராட்டத்தில் வென்றார் திருமுருகன் காந்தி

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்

Samayam Tamil 6 Aug 2020, 9:35 pm
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
Samayam Tamil திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி


கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், கொரோனாவைத் தடுக்கும் பணியில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரும் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், சமூக செயற்பாட்டாளர் திருமுருகன் காந்திக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

எனினும், போராட்டங்களின் ஊடாகவே பழகிப்போன திருமுருகன் காந்தி தைரியமாக கொரோனாவுடன் போராட மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரை தொடர்பு கொண்டு ஏராளமானோர் நலம் விசாரித்து வந்தனர்.

3600 மருத்துவ முகாம்கள்: அசத்தும் கோவை!

இந்த நிலையில், திருமுருகன் காந்திக்கு கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். கொரொனோ தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டதாக தெரிவித்துள்ள அவர், தனக்கு சிகிச்சையளித்து பாதுகாத்த அரசு மருத்துவமனையின் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும், தலைமை மருத்துவர் குழுவிற்கும், தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து ஆலோசனைகள் வழங்கி பாதுகாத்தவர்களுக்கும், நோய்தொற்று செய்தியறிந்து தொடர்புகொண்டு ஆதரவளித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்கள் ஒவ்வொருவரின் உதவியுடன் கொரொனோவை வென்றதாகவும் நெகிழ்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி