ஆப்நகரம்

மீண்டும் போராட்டத்திற்கு வருகிறார் திருமுருகன் காந்தி - குண்டர் சட்டம் ரத்து

திருமுருகன் காந்தி, டைசன், அருண் குமார் ஆகியோர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்.

Samayam Tamil 19 Sep 2017, 11:08 am
சென்னை : திருமுருகன் காந்தி, டைசன், அருண் குமார் ஆகியோர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்.
Samayam Tamil thirumurugan gandhi released from goondas act
மீண்டும் போராட்டத்திற்கு வருகிறார் திருமுருகன் காந்தி - குண்டர் சட்டம் ரத்து


கடந்த மே 21ம் தேதி தடையை மீறி நினைவேந்தல் கூட்டம் நடத்திய திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் 2009ல் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இறுதிக்கட்ட போர் நடந்தது . இதில் முள்ளி வாய்க்காலில் மே 17ம் தேதி லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு நினைவேந்தல் நடத்தும் விதமாக மெரினாவில் தடையை மீறி மே 17 இயக்கம் நினைவேந்தல் நடத்தியது.

இதனால் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் குண்டர் சட்டத்தில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இவர்கள் மீதான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர், மத்திய, மாநில அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் வகையில் பேசி வந்தார்.

அடுத்த செய்தி