ஆப்நகரம்

சென்னை அழைத்து வரப்பட்டார் திருமுருகன் காந்தி!

பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

Samayam Tamil 10 Aug 2018, 10:31 am
பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
Samayam Tamil Thirumurugan Gandhi


மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை போன்ற தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்துஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் உரையாற்றினார்.

இந்த நிலையில், நார்வேயிலிருந்து நேற்று அதிகாலை பெங்களூரு விமான நிலையம் வந்தடைந்த அவரை தடுத்த விமான நிலையக் காவலர்கள், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாகக் கூறி, விமான நிலையத்திலேயே திருமுருகன் காந்தியை கைது செய்தனர்.

மேலும் கைது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, சென்னை வேப்பேரி, மைலாப்பூர் காவல்நிலையத்தில் அவருக்கு எதிராக 124 (A) தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை காரணம் காட்டினர். இதுகுறித்து தமிழக உள்துறைக்கும், சென்னை நகர போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் பெங்களூரு விரைந்த தமிழக காவல்துறையினர், திருமுருகன் காந்தியை சென்னை அழைத்து வந்தனர்.

திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் வைகோ, திருமாவளவன், டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி