ஆப்நகரம்

வெளிநாட்டில் மனைவி இருக்கையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்த திருவாரூர் இளைஞர்!

திருவாரூர் மாவட்டம் அருகே, வெளிநாட்டில் பணிபுரியும் இளைஞர், தனது முதல் மனைவிக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 21 Jan 2019, 11:37 am

ஹைலைட்ஸ்:

  • திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானைச் சேர்ந்த முத்துக்கண்ணு மகன் ராஜ்குமார்(30)
  • வெளிநாட்டில் பணிபுரியும் இவர், தனது முதல் மனைவிக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil வெளிநாட்டில் மனைவி இருக்கையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்த திருவாரூர் இளைஞர்!
வெளிநாட்டில் மனைவி இருக்கையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்த திருவாரூர் இளைஞர்!
திருவாரூர் மாவட்டம் அருகே, வெளிநாட்டில் பணிபுரியும் இளைஞர், தனது முதல் மனைவிக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானைச் சேர்ந்த முத்துக்கண்ணு மகன் ராஜ்குமார்(30). சிங்கப்பூரில் ஓட்டுநராக வேலை பார்க்கும் இவர், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில், செவிலியராக பணியாற்றும் துர்காதேவி ரமிஸ்(28) என்ற பெண்ணை கடந்த 2016ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த ராஜ்குமாருக்கு, வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடத்த அவரது பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இதை அறிந்த துர்காதேவி, சிங்கப்பூரிலிருந்து ஆன்லைன் மூலமாக திருவாரூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு புகார் அளித்தார்.

தொடர்ந்து, சிங்கப்பூரிலிருந்து நேற்று பெருகவாழ்ந்தான் வந்த அவர், இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையிலான போலீசாருடன், திருமண மண்டபத்துக்குச் சென்றார். ஆனால் மணமக்கள் அங்கு இல்லை. அப்போது, 3 நாட்களுக்கு முன்பே திருமணம் நடந்து விட்டதாகவும், தற்போது வரவேற்பு நிகழ்ச்சி நடப்பதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த துர்கா தேவி, தனது கணவரை தன்னோடு அனுப்பி வைக்க வலியுறுத்தி திருமண மண்டபத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

வெளிநாட்டில் மனைவி இருக்கையில், வேறொரு பெண்ணை இளைஞர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி