ஆப்நகரம்

எம்.எல்.ஏ கோ.வி செழியனுக்கு தலைமை கொறடா பதவி..!

தமிழக அரசு தலைமை கொறடாவாக திருவிடைமருதூர் எம்.எல்.ஏ கோ.வி செழியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 7 May 2021, 9:37 pm
தமிழக அரசு தலைமை கொறடாவாக திருவிடைமருதூர் எம்.எல்.ஏ கோ.வி செழியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
Samayam Tamil கோ.வி செழியன்


முன்னதாக நேற்று திமுக அமைச்சரவை பட்டியல் வெளியானது. அதில் 15 புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்தது.

ஆனால், டெல்டா மாவட்டங்களில் இருந்து அமைச்சரவையில் ஒருவருக்கு கூட வாய்ப்பளிக்க வில்லை என சொந்த கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இன்று கொறடா பதவி தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த சபாநாயகர் யார்? முடிவு செய்த திமுக மேலிடம்!

தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகியவை உள்ளடக்கிய காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தமுள்ள 18 தொகுதிகளில் 15 தொகுதிகள் திமுக கூட்டணிக்கு கிடைத்துள்ள நிலையில் இந்த பகுதியில் இருந்து ஒருவருக்கு கூட அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி