ஆப்நகரம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் போராளிகள்: தூத்துக்குடி மக்கள் நலக்குழு வழக்கறிஞர்கள்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராளிகள் என்ற பெயரில் ஒரு சிலர் கிராமத்தில் மக்களை தூண்டிவிடுவதாகவும், அதை மக்கள் நம்பவேண்டாம் எனவும் தூத்துக்குடி மக்கள் நலக்குழு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 20 Dec 2018, 10:12 pm
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராளிகள் என்ற பெயரில் ஒரு சிலர் கிராமத்தில் மக்களை தூண்டிவிடுவதாகவும், அதை மக்கள் நம்பவேண்டாம் எனவும் தூத்துக்குடி மக்கள் நலக்குழு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil protest.


ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடுசெய்யப்போவதாக தமிழக முதல்வர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து மக்கள் யாரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட வேண்டாம் எனதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை பொருட்படுத்தாமல் சிலஅமைப்புகள் மக்களிடம் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மக்கள் நலக்குழு வழக்கறிஞர்கள் குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர் கூறுகையில், போராளிகள் என்ற பெயரில் சிலர் தங்களுக்கு ஆதரவு திரட்டி வருவதாக கேள்விப்பட்டோம். தூத்துக்குடி மக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம். பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் மீது ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டிக்கொள்கிறோம். தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளார்கள்.

ஆட்சியரும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று விளக்கம் கொடுத்துள்ளார். எனவே பொதுமக்கள் எவ்வித போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம் என்று தூத்துக்குடி மக்கள் நலக்குழு வழக்கறிஞர்கள் குழுவினர் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி