ஆப்நகரம்

பிரபல ஷாப்பிங் மால் ஊழியர்களுக்கு கொரோனா: அதிர்ச்சியில் சென்னைவாசிகள்!!

டெல்லியில் அண்மையில் நடைபெற்ற மதரீதியான மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தை சேர்ந்த 200-க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் ஒரு கடையில் பணிபுரியும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்ற செய்தி சென்னைவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Apr 2020, 8:56 pm
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை கடந் இரண்டு நாள்களில் கிடுகிடுவென உயர்ந்து இன்று 309 ஐ எட்டியுள்ளது.
Samayam Tamil mall chennai


இவர்களில் கிட்டத்தட்ட 250 பேர், டெல்லியில் அண்மையில் நடைபெற்ற மதரீதியான மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

இதன் விளைவாக, கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கையின் அடிப்படையில்,, தமிழகம் தேசிய அளவில் இரண்டாவது இடத்துக்கு சென்றுள்ளது.

கொரோனா : சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையா?

இந்த அதிர்ச்சி ஒருபுறம் இருக்க, சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல வணிக நிறுவனமான ஃபீனின்ஸ் மால் வளாகத்தில் உள்ள லைஃப் ஸ்டைல் கடையில் பணிபுரியும் மூன்று ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அவர்களும், அவர்களின் சகப்பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலை சென்னை மாநகராட்சி நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

சென்னையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: காவல் ஆணையர் அதிரடி உத்தரவு

அத்துடன், கடந்த மார்ச் 10 ஆம் தேதி முதல் மார்ச் 17 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ஃபீனிக்ஸ் மாலுக்கு, அதுவும் குறிப்பாக லைஃப் ஸ்டைல் கடைக்கு சென்று வந்த வாடிக்கையாளர்கள் யாருக்காவது கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால், அவர்கழ் மருத்துவ உதவிகளை பெற, 044 -2538 4520, 044 -4612 2300 ஆகிய எண்களை உடனே தொடர்புகொள்ள வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை ,மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், கோட்டூர்புரம், போரூர் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்லும் ஃபீனிக்ஸ் மாலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது சென்னை மாநகர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி