ஆப்நகரம்

நிதியமைச்சரை மார்ஃபிங் செய்த இளைஞர்; வாட்ஸ்-அப் அட்மினோடு கும்பலாக கைது...!

நிதியமைச்சர் ஜெயக்குமாரை மார்ஃபிங் செய்து, வாட்ஸ்-அப்பில் உலவ விட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

TNN 26 Jul 2017, 11:26 pm
சென்னை: நிதியமைச்சர் ஜெயக்குமாரை மார்ஃபிங் செய்து, வாட்ஸ்-அப்பில் உலவ விட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil three held for posting morphed photo
நிதியமைச்சரை மார்ஃபிங் செய்த இளைஞர்; வாட்ஸ்-அப் அட்மினோடு கும்பலாக கைது...!


சமூக வலைத்தளங்களில் கண்டிக்கும் வகையில் பதிவுகளை இடுபவர்கள் மீது சட்டம் வேலையை காட்டி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தில் டீ கடை வைத்து நடத்தி வரும் சகோதரர்கள் செந்தில்(33), ரமேஷ்(39). இவர்கள் வாட்ஸ்-அப்பில் ’சோமங்கலம் நண்பர்கள்’ என்ற பெயரில் குரூப் ஒன்றை நடத்தி வருகின்றனர். அதில் உறுப்பினராக உள்ள குணசேகரன்(27) என்பவர் ஒரகடம் தொழிற்பேட்டையில் பணிபுரிந்து வருகிறார்.

அவர் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமாரை மார்ஃபிங் செய்து புகைப்படம் ஒன்றை வாட்ஸ்-அப் குரூப்பில் இட்டுள்ளார். இதைக் கண்ட அதே குரூப்பில் இருக்கும் மணிமங்கலத்தைச் சேர்ந்த சிங்காரவேலன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரித்த போலீசார், கடந்த 20ஆம் தேதி நிதியமைச்சர் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டதை கண்டறிந்தனர். இதையடுத்து குரூப் அட்மின்கள் இருவர், பதிவிட்டவர் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

அவர்கள் மீது ஐடி சட்டப்பிரிவு எண் 67 மற்றும் 67(A) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மூவரும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த வாட்ஸ்-அப் குரூப்பில் 198 பேர் உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Three held for posting morphed photo of TN finance minister in WhatsApp group.

அடுத்த செய்தி