ஆப்நகரம்

முறைகேடு புகார் காரணமாக 3 மாவட்ட நீதிபதிகள் அதிரடி நீக்கம்!

முறைகேடு புகார் காரணமாக சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட 3 மாவட்ட நீதிபதிகள் பதவிநீக்கம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

Samayam Tamil 21 Mar 2018, 11:07 am
முறைகேடு புகார் காரணமாக சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட 3 மாவட்ட நீதிபதிகள் பதவிநீக்கம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
Samayam Tamil chennai high court


சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு பதிவாளர் கே. அருள், சென்னை குடும்ப நல நீதிமன்ற கூடுதல் முதன்மை நீதிபதி டி.லீலாவதி, திருவண்ணாமலை தலைமை நீதிபதி நடராஜா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் மீது நீதித்துறை அதிகாரிகளிடம் தவறாக நடந்து கொண்டதாவும், லஞ்சம் பெற்றதாகவும் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. இதையடுத்து இவர்கள் மூவரையும் பதவிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தற்போது செய்திகள் வந்துள்ளன.

இவர்களில் லீலாவதி மற்றும் அருள் ஆகியோரது பணிக்காலம் 58 வயதில் நிறைவு பெறுகிறது. திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி நடராஜாவுக்கு இன்னும் 20 ஆண்டுகள் பணிக்காலம் உள்ளது.

இந்நிலையில், இவர்கள் மீது 50 புகார்கள் நிலுவையில் உள்ளதாகவும், இவர்களை பணி நீக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்ததால், பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்களில் நீதிபதி அருள், இந்திய தலைமை நீதிபதியிடம் இரண்டு முறை நற்சான்றிதழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி