ஆப்நகரம்

மொினா கடற்கரையில் குளித்த 3 மாணவா்கள் ஒரே நாளில் பலி

சென்னை, மெரினா கடலில் குடும்பத்தினருடன் குளித்த இரண்டு பள்ளி மாணவர்கள், ஒரு கல்லூரி மாணவர் அலையில் இழுத்து செல்லப்பட்டனர். இதில் ஒரு மாணவாின் உடல் மட்டுமே கிடைத்துள்ளது.

TOI Contributor 11 Sep 2017, 6:10 pm
சென்னை, மெரினா கடலில் குடும்பத்தினருடன் குளித்த இரண்டு பள்ளி மாணவர்கள், ஒரு கல்லூரி மாணவர் அலையில் இழுத்து செல்லப்பட்டனர். இதில் ஒரு மாணவாின் உடல் மட்டுமே கிடைத்துள்ளது.
Samayam Tamil three students missing in merina beach
மொினா கடற்கரையில் குளித்த 3 மாணவா்கள் ஒரே நாளில் பலி


சென்னை மெரினா கடற்கரைக்கு விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். நேற்றும் (செப்.10) அதே போன்று கூட்டம் அதிகம் காணப்பட்டது.

சென்னை எம்.ஜி.ஆர். நகர், கோவிலம்பாக்கத்தை சேர்ந்த சுதாகர், முருகன் இருவரும் குடும்ப நண்பர்கள். இருவரும் விடுமுறையை முன்னிட்டு தங்களது குடும்பத்தினருடன் நேற்று மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர்.

கடற்கரை மணலில் அமர்ந்து சிறிது நேரம் விளையாடிய பின்னர் அனைவரும் கடலில் இறங்கியுள்ளனர். அப்போது வந்த பெரிய அலையில் சுதாகரின் மகன் ஆகாஷும், முருகனின் மகன் தனுஷும் அடித்துச் செல்லப்பட்டனர். திடீரென வந்த அலையில் தங்கள் மகன்கள் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்த சுதாகரும், முருகனும் அதிர்ச்சி அடைந்தனர்.

தங்கள் மகன்களை தேடினர், ஆனால் கடல் அலையில் சிக்கிய இருவரும் மறைந்து விட்டனர். சுதாகரின் மகன் ஆகாஷ் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார், முருகனின் மகன் தனுஷ் ஏழாம் வகுப்பு படித்து வநதார். இருவரும் காணாமல் போனது பற்றி பெற்றோர்கள் அண்ணா சதுக்கம் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடல் அலையில் அடித்துச்சென்ற தனுஷ், ஆகாஷ் இருவரையும் மீனவர்கள் உதவியுடன் தேடினர். இதில் ஆகாஷ் உடல் மட்டும் உயிாிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. தனுஷின் உடல் கிடைக்கவில்லை.

இதே போல் நேற்று மாலை எம்.ஜி.ஆர். சமாதி பின்புறம் கல்லூரி மாணவர் சக்திவேல் கடல் அலையில் இழுத்துச்செல்லப்பட்டார். அவரது உடல் இதுவரை கிடைக்கவில்லை. நண்பர்களுடன் கடலில் குளித்த சக்திவேலை ராட்சத அலை இழுத்துச் சென்றது.

நண்பர்கள் முயற்சி செய்தும் சக்திவேலை காப்பாற்ற முடியவில்லை. சக்திவேல் திருவண்ணாமலை, கலசப்பாக்கத்தை சேர்ந்தவர். தனியாா் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் இதுவரை கிடைக்கவில்லை.

அடுத்த செய்தி