ஆப்நகரம்

மகிழ்ச்சி: கொரோனா இல்லாத நகராக மாறியது திருச்சி!

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், திருச்சி மாநகரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற அனைவரும் குணமடைந்துள்ளனர். இதனால், கொரோனா பாப்திப்பு இல்லாத நகராக திருச்சி மாறியுள்ளது.

Samayam Tamil 29 Apr 2020, 5:01 pm
திருச்சி: கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாநகரை சேர்ந்தவர்கள் அனைவரும் குணமடைந்ததையடுத்து, கொரோனா இல்லாத நகராக திருச்சி மாறியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது சற்றே மகிழ்ச்சிகரமான விஷயமாக இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 70 பேரில் 69 பேர் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியது. ஏற்கனவே 65 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது எஞ்சிய 4 பேரும் குணமடைந்தனர். ஈரோட்டில் கொரோனாவால் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.

22 மாவட்டங்களில் இன்று முதல்; படிப்படியாக விலக்கிக் கொள்ளும் கர்நாடகா!

இதனிடையே, திருச்சி மாநகரை சேர்ந்த 26 பேரில் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், எஞ்சிய மூன்று பேரும் தற்போது குணமடைந்துள்ளனர். இதனால், கொரோனா தொற்று இல்லாத நகராக திருச்சி மாநகரம் மாறியுள்ளது.

அதேசமயம், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 14 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி