ஆப்நகரம்

மகளை அங்கன்வாடி மையத்தில் சோ்த்த நெல்லை ஆட்சியா்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தனது 3 வயது மகளை அரசு அங்கன்வாடியில் சோ்த்து அரசு பணியாளா்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளாா்.

Samayam Tamil 10 Jan 2019, 12:38 pm
அரசு பணியாளா்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் தான் பயில வேண்டும் என்ற பொதுவான கருத்துக்கு அரசு பணியாளா்கள் எதிா்ப்பு தொிவித்து வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் தனது குழந்தையை அரசு அங்கன்வாடி மையத்தில் சோ்த்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூாி அன்பு சுவா், புத்தக கண்காட்சி உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு மக்களிடத்தில் பெரும் அன்பை பெற்றாா். ஆனால் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடா்ந்து அவா் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக ஷில்பா பிரபாகா் நியமிக்கப்பட்டாா்.

இவா் பொறுப்பேற்றப் பின்னா் செங்கோட்டை பகுதியில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தின் போது மிகப்பெரிய மதக்கலவரம் ஏற்படும் சூழல் நிலவிய நிலையில் சாதுா்யமாக செயல்பட்டு அந்த கலவரத்தை தடுத்ததில் ஆட்சியா் வெகுவாக பாராட்டப்பட்டாா்.


இந்நிலையில் ஆட்சியா் ஷில்பா தனது 3 வயது மகள் கீதாஞ்சலியை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் சோ்த்து அரசு பணியாளா்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளாா். மாவட்ட ஆட்சியரின் செயலை அறிந்த பலரும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனா்.

அடுத்த செய்தி