ஆப்நகரம்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: ஞாயிற்றுக் கிழமை சென்னை கிளம்புறீங்களா?

திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் நாளை (மார்ச் 26) நெல்லையிலிருந்து கிளம்புகிறது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 25 Mar 2023, 12:44 pm
நான்கு முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகளுடன் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை (நாளை) இயக்கப்படுகிறது.
Samayam Tamil train


வார இறுதி நாள் பயணிகள் தேவைகளை கருத்தில் கொண்டு திருநெல்வேலி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06040) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) அன்று மாலை 06.00 மணிக்கு புறப்பட்டு இரவு 08.35 மணிக்கு மதுரை வந்து சேரும்.
அரசு ஊழியர்களுக்கு இறையன்பு அனுப்பிய மெசேஜ்: இதை செய்யவேண்டியது நம்‌ கடமை!
பின்பு மதுரையில் இருந்து இரவு 08.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் (மார்ச் 27) காலை 06.15 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தேசிய அரசியலில் ஸ்டாலின் போடும் பிளான்: தமிழ்நாட்டை நோக்கி திரும்பும் டெல்லி!
இந்த ரயிலில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டியுடன் கூடிய மாற்று திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி