ஆப்நகரம்

கொரோனா விழிப்புணர்வு: எமன் அவதாரம் எடுத்த போலீஸார்!!

போலீஸார் எமன் வேடமணிந்து கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது திருப்பூர் மாநகர மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 29 Mar 2020, 10:37 pm
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் நோய்தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்பேரில் போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil tirupur police


இதில், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முககவசம் அணிய வேண்டும் என பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வு அம்சங்களை போலீசார் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குச் சென்று ஒலிபெருக்கி மூலம் ஏற்படுத்தி வருகின்றனர்.

அதேசமயம், ஊரடங்கு உத்தரவை மீறி தேவையற்று சாலையில் பயணிக்கும் நபர்களிடம் பல விதங்களில் அறிவுரை கூறுவதுடன், நூதன தண்டனைகளும் கொடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது.

நெல்லை: குழிக்குள் பதுக்கிவைத்து மது விற்பனை... பார் முதலாளி கைது

இந்த நிலையில், பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், சாலைகளில் நடமாடாமல் 144 தடை உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருப்பூர் மாநகர போலீஸார் எமன் வேடம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் அவர்கள், சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி முககவசம் இல்லாமல் வரும் நபர்களின் ஆயுட்காலம் முடிகிறது என்று தெரிவிக்கின்றனர். அத்துடன், இப்பேற்பட்டவர்கள் மண்ணுலகுக்கு வேண்டாம்; அவர்களை விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லலாம் எனவும் போலீஸார் நகைச்சுவையுடன் கூறி விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி