ஆப்நகரம்

திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகத்தை மண்டல அலுவலகமாக தரம் உயர்த்த வலியுறுத்தல்!

திருப்பூர் பி.எப்., அலுவலகத்தை மண்டல அலுவலகமாக தரம் உயர்த்த, எம்.பி சத்தியபாமா இன்று மக்களவையில் வலியுறுத்தி பேசினார்.

Samayam Tamil 5 Feb 2019, 3:08 pm
திருப்பூர் பி.எப்., அலுவலகத்தை மண்டல அலுவலகமாக தரம் உயர்த்த, எம்.பி சத்தியபாமா இன்று மக்களவையில் வலியுறுத்தி பேசினார்.
Samayam Tamil திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகத்தை மண்டல அலுவலகமாக தரம் உயர்த்த வலியுறுத்தல்!
திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகத்தை மண்டல அலுவலகமாக தரம் உயர்த்த வலியுறுத்தல்!


டெல்லியில் இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரில் பங்கேற்று பேசியதாவது: திருப்பூர் பி.எப்., அலுவலகம், திருப்பூர், பல்லடம், காங்கயம், தாராபுரம், அவிநாசி, ஊத்துக்குளி பகுதிகளை உள்ளடக்கி இயங்குகிறது. இங்கு 3500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில், 2.25 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், பி.எப்., சந்தாதாரர்களாக உள்ளனர்.

திருப்பூர் அலுவலகம், ஜீவன் பிரமாண் பத்திரம் பெற, கடந்த ஆண்டு 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஓய்வூதியர்களை பதிவு செய்தது. ஆதாரில் திருத்தம் செய்வது, புதிய ஆதார் பெறுவதற்காக, உதவி மையமும் உருவாக்கப்பட்டுள்ளது. பி.எப்., நிறுவன நாள் விழாவில், 2018ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட அலுவலகம் என்கிற விருது, திருப்பூர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டது. தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விரிவான அலுவலகம், கூடுதல் அதிகாரம் தேவைப்படுகிறது.

எனவே ஏழை ஊழியர்களுக்கு சேவை புரியவும், சமூகத்தின் நல்லிணக்கத்தை கொண்டுவரவும் இந்த திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகத்தை மண்டல அலுவலகமாக தரம் உயர்த்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எம்.பி சத்தியபாமா மக்களவையில் வலியுறுத்தி பேசினார்.

அடுத்த செய்தி