ஆப்நகரம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை கொல்ல முயன்றது இவர்களா?

மாவட்ட ஆட்சியரை கூலிப்படையினர் கொல்ல முயன்ற சம்பவம் திருவண்ணாமலையில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 16 Sep 2017, 1:45 pm
மாவட்ட ஆட்சியரை கூலிப்படையினர் கொல்ல முயன்ற சம்பவம் திருவண்ணாமலையில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil tiruvannamalai collector attempted to murder by mercenary
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை கொல்ல முயன்றது இவர்களா?


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரான கந்தசாமியை கூலிப்படையினர் கொலை செய்ய முயற்சி செய்தது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மதியம் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தனது அலுவலக பணிகளை முடித்து விட்டு, அலுவலகம் எதிரே உள்ள தனது வீட்டுக்கு மதிய உணவு சாப்பிட நடந்து சென்றுள்ளார்.

அவருடன் நேர்முக எழுத்தர், டபோதர் ஆகியோரும் சென்றுள்ளனர்.வீட்டின் கதவருகே கந்தசாமி சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கினர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நேர்முக எழுத்தர் கத்தி கூச்சலிட்டார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரையும் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து கத்தி, மிளகாய் பொடி ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார், பின்னர் அவர்களை திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த சிவா, மணிகண்டன், திருப்போரூரை அடுத்த தாழம்பூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பதும், இவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

காவல்துறையின் விசாரணையில் அவர்கள் கூறியதாவது , “விழுப்புரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குதான் வந்தோம் . பின்பு திருவண்ணாமலையில் உள்ள ஒரு பாரில் மது அருந்தினோம்.பாரில் எங்களுடன் குடித்த ஒருவருக்கும் எங்களுக்கும் தகராறு வந்தது . அவரை கொல்ல முடிவெடுத்து , பின் தொடர ஆரம்பித்தோம் .

அந்த நபர் அணிந்திருந்த அதே நிறமுடைய, மேல் சட்டையை மாவட்ட ஆட்சியர் அணிந்திருந்ததால் , ஆள் மாறி, மாவட்ட ஆட்சியரை கொல்ல முயன்றதாக கூறினார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து கலெக்டருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி