ஆப்நகரம்

சைரன் வைத்த காரில் அழைத்துச் சென்று மாணவியை ஊக்கப்படுத்திய திருவண்ணாமலை கலெக்டர் !

திருவண்ணாமலையை சேர்ந்த மாணவி தனது எதிர்கால லட்சியத்தை மாவட்ட ஆட்சியரிடம் கூறியிருக்கிறார், அதற்கு அந்த மாவட்ட ஆட்சியர் வித்யாசமான முறையில் அவரை ஊக்குவித்துள்ளார்.

TNN 26 Dec 2017, 3:05 pm
திருவண்ணாமலையை சேர்ந்த மாணவி தனது எதிர்கால லட்சியத்தை மாவட்ட ஆட்சியரிடம் கூறியிருக்கிறார், அதற்கு அந்த மாவட்ட ஆட்சியர் வித்யாசமான முறையில் அவரை ஊக்குவித்துள்ளார்.
Samayam Tamil tiruvannamalai collector encourages girl student
சைரன் வைத்த காரில் அழைத்துச் சென்று மாணவியை ஊக்கப்படுத்திய திருவண்ணாமலை கலெக்டர் !

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 வகுப்பு படித்து வருகிறார் மோனிஷா . இவர் பத்தாம் வகுப்பில் 491 மதிப்பெண் பெற்றுள்ளார். இதை பாராட்டும் வகையில் இவருக்கு கல்வி உதவித் தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது அந்த மாணவி மாவட்ட ஆட்சியரிடம் ’நான் உங்களைப் போல ஒரு மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனைக்கேட்ட மாவட்ட ஆட்சியர் அவரை தனது காரில் ஏற்றிக்கொண்டு ஒரு ரவுண்டு சென்றுள்ளார். பின்பு அவருடன் காரில் இருப்பதுபோல் புகைப்படத்தை எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படத்தை அவரிடம் கொடுத்துவிட்டு ‘ இந்த புகைப்படத்தை பார்க்கும்போதெல்லாம் உனக்கு மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்ற எண்ணம் வரும் . நானும் அரசுக் பள்ளியில் படித்துத்தான் மாவட்ட ஆட்சியராக பொருப்பேற்றேன் ’என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி