ஆப்நகரம்

ஆருத்ரா மோசடியில் 'தலைமை'க்கு நெருக்கம்.. மனசு கேக்காததால் மாநில செயலாளர் ராஜினாமா..!

ஆருத்ரா மோசடியில் ஈடுபட்டவர்களுடன் தமிழக பாஜக தலைமை நெருக்கமாக உள்ளது எனக்கூறி பாஜக பொருளாதார பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ண பிரபு ராஜினாமா செய்தார்.

Authored byதிவாகர் மேத்யூ | Samayam Tamil 13 Apr 2023, 1:25 pm
தமிழக பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறும் நிகழ்வுகள் அதிரவலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தை உலுக்கியுள்ள ஆருத்ரா நிறுவனத்தின் 2400 கோடி மோசடியில் பாஜகவின் முக்கிய தலைகளின் பெயர்கள் உருளுகின்றன. அந்த வகையில், நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே. சுரேஷ் ஆருத்ரா மோசடியில் சந்தேகத்தின் பெயரில் சிக்கியுள்ளார்.
Samayam Tamil annamalai


அவரிடம் விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே ஆர்.கே. சுரேஷ் தலைமறைவானார். இந்த சூழலில், ஆருத்ரா மோசடியில் ஈடுபட்டவர்களுடன் தமிழக பாஜக தலைமை நெருக்கமாக உள்ளது எனக்கூறி பாஜக பொருளாதார பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ண பிரபு தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கிருஷ்ண பிரபு எழுதியுளாள் ராஜினாமா கடிதம்

தமிழக பாஜகவின் பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக இருந்து வருகிறேன் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கக் கூட தகுதி இல்லாத சிலரை நீங்களும் கேசவ விநாயகமும் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்ப்பதாலும், கட்சியில் நீங்கள் சொல்வதைப் போல கட்சி உறுப்பினர்களிடமும் நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் எந்த காலத்திலும் கட்சி வளராது.

அதற்கும் மேல் நேர்மாறாக இங்கே அவர்களது சுய லாபத்திற்காகவும் மதம் சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டுக்குள் பலவிதமான சச்சரவுகளையும் மேலும் எங்களிடமிருந்து தொண்டர்கள் நிர்வாகிகள் இருந்தும் பணம் வசூலிக்க சொல்லியும் மேலும் பணத்தைப் பெற்றுக் கொண்டும் பல விதமான அரசியல்களை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆருத்ரா

எங்களை நீங்கள் ஜனநாயகத்துக்கு எதிராக எங்களை வற்புறுத்தி சில விஷயங்களையும் கோரிக்கைகளையும் செய்ய சொல்வதாலும் என்னைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சிக்கும் உங்களுக்கும் உண்மையாக வேலை பார்த்தநிர்மல் குமாரை போன்ற நிர்வாகிகளையும் பல இன்னல்கள் ஆளாகிய எந்த ஒரு கட்சி வேலையில் செயல்பட விடாமல் செய்தனர். மேலும், ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருந்து வருகிறது இதை கண்டும் காணாமல் இருப்பதற்கு எனது மனம் கொள்ளவில்லை.

இந்தக் கட்சி என்னையும் என் குடும்பத்தாரையும் பழுது பார்த்து விட்டனர். மேலும் இந்த பொருளாதார பிரிவின் பிரச்சனைகளையும் நேரடியாக உங்களுக்கும் கட்சி அலுவலகத்துக்கும் பிரச்சினைகளை சொல்லியும் இதுவரை நீங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் நான் எனது பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளரும் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.

நீங்கள்தான் காரணம்

இதற்கு முழு காரணமாக இருக்கும் பொருளாதார பிரிவின் மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் நரசிங்க பெருமாள் இவர்களை எல்லாரையும் வழிநடத்தும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகிய நீங்கள்தான், நீங்கள் சரி பட செயல்படவில்லை என்று குறிப்பிடுகிறேன்.

பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்த கட்சியில் பொறுப்பு வழங்கப்படுகிறது என ஊர்ஜிதமான உண்மை. இதற்கு பலவிதமான ஆதாரங்கள் உள்ளன. இதற்கும் மேல் பாரதிய ஜனதா கட்சியில் என்னை அர்ப்பணித்தேன் என்றால் எனது உயிருக்கே பல பாதிப்பு வரும் என்று நினைத்து இந்த கட்சியில் இருந்து நான் நிரந்தரமாக ராஜினாமா செய்கிறேன் நன்றி.
எழுத்தாளர் பற்றி
திவாகர் மேத்யூ
திவாகர். நான் தொலைக்காட்சி, நியூஸ் ஆப், செய்தி இணைதளம் என ஊடக துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறேன். எழுத்தின் மீதான ஆர்வமும் ஊடகத்தின் மீது இருக்கும் பற்றால் இத்துறையை தேர்வு செய்துள்ளேன். அரசியல், குற்றம், அரசியல் - குற்றம் சார்ந்த அலசல், அரசு சார்ந்த செய்திகளை எவ்வித சமரசமும் இல்லாமல் எழுதி வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக TIMES Of INDIA சமயம் தமிழில் Senoir Digital Content Producer ஆக பணியாற்றுகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி