ஆப்நகரம்

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் இன்று துவக்கம்

சட்டசபையில் தமிழக பட்ஜெட் மீதான விவாதம் இன்று துவங்கி வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

TNN 20 Mar 2017, 8:20 am
சென்னை : சட்டசபையில் தமிழக பட்ஜெட் மீதான விவாதம் இன்று துவங்கி வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
Samayam Tamil tn budget discussion starts from today
தமிழக பட்ஜெட் மீதான விவாதம் இன்று துவக்கம்


தமிழகத்தின் 2017-2018-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 16-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். சட்டசபை உறுப்பினர்கள் பட்ஜெட் படித்து முழுமையாக அறிந்து கொள்வதற்காக ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.இதன்பின்னர் சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள் ஆகும்.

எனவே பட்ஜெட் மீதான விவாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மூன்று நாட்களுக்கு பிறகு இன்று துவங்கி வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று காலை 10 மணிக்கு கூடும் சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்படும்.

பின்னர் கேள்வி நேரம் ஆரம்பிக்கும் கேள்வி நேரத்தில் சட்டசபை உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். பின்னர் ,பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று துவங்கி வரும் 24-ம் தேதி வரை நடைபெறும். முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யத முதல் பட்ஜெட் இதுவாகும்.
TN Budget discussion starts from today

அடுத்த செய்தி