ஆப்நகரம்

அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கான ஒப்பந்த புள்ளிகள் விரைவில் கோரப்படும்: முதல்வர் உறுதி

கோயம்புத்தூர் சென்ற முதல்வர், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

Samayam Tamil 27 Oct 2018, 6:15 pm
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்திட ஒப்பந்த புள்ளிகள், விரைவில் கோரப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி கூறியுள்ளார்.
Samayam Tamil cm
அத்திக்கடவு - அவினாசி திட்டம் விரைவில் தொடக்கம்: முதல்வர் பழனிசாமி


கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடிபழனிசாமி பி.என். புதூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த முதல்வர், தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு மூலம் துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், செல்லும் இடமெங்கும் அதிமுக அரசுக்கு மக்களிடையெ அமோக ஆதரவு உள்ளதாக தெரிவித்தார்.

பிரதமர் மோடியை சந்திக்கும் போதெல்லாம் அவரிடம் மீனவர்கள் பிரச்னை குறித்து பேசப்பட்டு வருவதாக தெரிவித்த முதல்வர், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்திட ஒப்பந்த புள்ளிகள், விரைவில் கோரப்படும் என்று கூறினார்.

அடிமட்டத் தொண்டனாக இருந்து இந்த நிலைக்கு வந்துள்ள தமக்கு, மக்களின் பிரச்சனைகள் நன்றாகத் தெரியும் என்றும் அவர் கூறினார். கோவை லாலி சாலை சந்திப்பில் உயர் மட்டப் பாலம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

முன்னதாக கோயம்புத்தூர் ஆற்றுப்பாலம் முதல் உக்கடம் வரை அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட பால பணிகளை ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து, பேரூர் புறவழிச்சாலை ஓரத்தில் உள்ள பெரிய குளத்தின் ஏரி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகிறது. அதையும் முதல்வர் பார்வையிட்டார்.

தொடர்ந்து மருதமலை செல்லும் வழியில் உள்ள வடவள்ளி பகுதியில், குடிநீரை சேமித்து வைக்க மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. அதையும் அவர் ஆய்வு செய்தார். அவருடன் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்.

அடுத்த செய்தி