ஆப்நகரம்

சண்முகாநதி நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

தேனி மாவட்டம் 8 வருவாய் கிராமங்கள் பாசன வசதிபெறும்

Samayam Tamil 12 Dec 2018, 1:29 pm
தேனி மாவட்டம் சண்முகாநதியிலிருந்து நீர்திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பது.’ தேனி மாவட்டம், சண்முகாநதி நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள உத்தமபாளையம் வட்டத்தை சார்ந்த புன்செய் நிலங்கள் பயன்பெறும் வகையில் சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
Samayam Tamil edapadi palanisamy


வேளாங் பெருமக்களின் வேங்டுகோளினை ஏற்று, தேனி மாவட்டம், சங்முகாநதி நீர்த்தேக்கத் திட்டத்தின் கீழ் உத்தமபாளையம் வட்டத்தை சார்ந்த 1640 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயன்பெறும் வகையில் மொத்தம் 62.69 மி.கன அடி தண்ணீரை சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து 14.12.2018 முதல் 50 நாட்களுக்கு திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தைச் சார்ந்த இராயப்பன்பட்டி, மல்லிங்காபுரண், சின்ன ஓவுலாவுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேந்வைபட்டி, அழகாபுரி, ஓடைப்பட்டி மற்றுண் சீப்பாலக்கோட்டை ஆகிய 8 வருவாய் கிராமங்கள் பாசன வசதிபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீந் மேலாண்மை மேற்கொங்டு உயர்ந்த மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி