ஆப்நகரம்

கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் போட்ட உத்தரவு!

தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Samayam Tamil 21 Oct 2021, 7:08 am
மெகா கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
Samayam Tamil irai anbu


கொரோனா பரவலை மற்ற மாநிலங்களை விரைவாக கட்டுக்குள் கொண்டு வந்தது தமிழ்நாடு. இதற்கு முக்கிய காரணம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி ஒன்றிய அரசிடம் பேசி தடுப்பூசிகளை பெற்று முகாம்களை அதிகப்படுத்தியது தான். தமிழகத்தில் நேற்று வரை 5 கோடியே, 12 லட்சத்து 46 ஆரயிரத்து 870 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் மூலம் ஒரே நாளில் பல லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மக்கள் மத்தியில் இந்த சிறப்பு முகாம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு முறையும் அரசு நிர்ணயிக்கும் அளவை விட கூடுதலாகவே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து: அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்!
மதுப் பிரியர்கள், அசைவ உணவு பிரியர்களின் வசதிக்காக ஞாயிற்றுக் கிழமைக்குப் பதிலாக இந்த வாரம் சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அன்றைய தினத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு , மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு , சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி , சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர்.
வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் தெரியுமா?
கூட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கக்கூடிய மாவட்டங்கள் தடுப்பூசி போடும், பணிகளை தீவிரமாக மேற்கோள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.

தீபாவளி பண்டிகை வருவதால் மக்கள் கூட்டம் துணிக்கடைகளில் அதிகமாக இருக்கும். லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுப்பார்கள். நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து ஆரம்ப பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன, இதனால் அதற்கு முன்னதாக அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி