ஆப்நகரம்

வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு இழப்பீடு அறிவிப்பு!

இந்திய சீன எல்லையில் நடைபெற்ற சண்டையில் வீரமரணம் அடைந்த தமிழக ரானுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு தமிழக அரசு இழப்பீடு அறிவித்துள்ளது

Samayam Tamil 16 Jun 2020, 6:28 pm
இந்திய-சீன எல்லை பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இரு நாட்டு ராணுவ வீரர்களும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின் போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது நடைபெற்ற துப்பாக்கி சண்டையின் போது, இந்திய ராணுவ தரப்பில் ஒரு அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
Samayam Tamil ராணுவ வீரர் பழனி
ராணுவ வீரர் பழனி


வீரமரணம் அடைந்தவர்களில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் ஒருவர்.

இந்த நிலையில், நாட்டிற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட இவங்களுக்கும் ஆயிரம் ரூபா, அசத்தும் தமிழ்நாடு முதல்வர்!

அதுதவிரம், ராணுவ வீரர் பழனி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

முன்னதாக, லடாக் எல்லை பகுதியில் சீன ராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் - கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் பழனி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாகவும், வீரமரணம் எய்திய பழனியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி