ஆப்நகரம்

டி.என்.சேஷன் மறைவு: முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய காலகட்டத்தில் தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் டி.என்.ஷேசன்

Samayam Tamil 11 Nov 2019, 12:21 pm
சென்னை: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


ஓய்வு பெற்ற மூத்த இந்திய ஆட்சிப்பணித் துறை அதிகாரியும், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையருமான டி.என்.சேஷன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87.

தேர்தல் சீர்திருத்தங்களின் நாயகன் டி.என்.சேஷன்; அப்படி என்ன சாதித்தார் இவர்?

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய காலகட்டத்தில் தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவரும், தமிழக அரசின் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தவருமான டி.என்.ஷேசனின் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



அந்த வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டி.என்.சேஷன் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வேதணையடைந்தேன். டி.என். சேஷன் சிறந்த நிர்வாகியாகவும் கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவராகவும் திகழ்ந்தார். அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.


சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்தி ஜனநாயகத்தின் உறுதி மிக்க பாதுகாவலராக திகழ்ந்தவர் டி.என்.சேஷன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,”தைரியம் மற்றும் நம்பிக்கையில் உருவாகமாக டி.என்.சேஷன் நினைவு கூறப்படுபவர். சமானிய மனிதர்களிடம் தேர்தல் ஆணையம் எத்தகைய சக்திவாய்ந்தது என்ற விவாதத்தை கொண்டு வந்தவர்” என டி.என்.சேஷன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி