ஆப்நகரம்

நேற்று செம்பரம்பாக்கம்... இன்று கடலூர்... சூறாவளியாய் சுழலும் முதல்வர்!

நிவர் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடலூர் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

Samayam Tamil 26 Nov 2020, 10:33 am
அதி தீவிர புயலான நிவர் இன்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்துக்கு பலத்த சூறைக்காற்று கனமழை கொட்டித் தீர்த்தது.
Samayam Tamil கோப்பு படம்
முதல்வர் பழனிசாமி கடலூர் பயணம்


இதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்துக்கு அருகே உள்ள கடலூர் மாவட்டத்தில் பயிர்கள் சேதம் உள்ளிட்ட புயல், மழை பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. கடலூர் நகர பகுதிகளில் மட்டும் நேற்று ஒரு நாளில் 28 சென்டிமீட்டர் அளவுக்கு தொடர் மழை பெய்துள்ளது.

இதனையடுத்து, நிவர் புயல், மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் 2:30 மணியளவில் கடலூருக்கு செல்ல உள்ளார்.

புயல் போயாச்சு... விமான சேவை மீண்டும் தொடக்கம்

முன்னதாக அவர் நேற்று, சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று அங்கு தண்ணீர் திறநதுவிடப்படுவதை நேரில் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி