ஆப்நகரம்

கஜா புயல் பாதிப்பு மக்களை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல்! மக்களோடு மக்களாக ரயிலில் பயணம்

கஜா புயலால் மிகவும் பாதிப்புக்குள்ளான நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி இன்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

Samayam Tamil 28 Nov 2018, 10:24 am
கஜா புயலால் மிகவும் பாதிப்புக்குள்ளான நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி இன்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.
Samayam Tamil palanisamy gaja


நாகை திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களும் கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்டன. இந்த இரு மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களை இன்று காலை, முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முதலில் நாகையில் உள்ள பஞ்சாய்த்து அலுவலகத்தில் வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும, நிவாரணப் பணியின் போது உயரிழந்த மின்ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணிநியமன ஆணையும் வழங்கினார்.
தொடர்ந்து வெள்ளப்பள்ளம், விழுந்தமாவடி, புஷ்பவனம், வேதராண்யம் உள்ளிட்ட இடங்களுக்கும் சாலை மார்கமாக செல்ல உள்ளார். சாலை வழியாக செல்வதால், பொதுமக்கள் போராட்டம் நடத்தாமல் இருப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டணத்தில் முழுமையான ஆய்வுக்குப் பிறகு மதியம் 2 மணி முதல் திருவாரூர் மாவட்டத்துக்குச் செல்கிறார். அங்கு புயல் பாதிப்பு இடங்கள், விவசாய நிலங்களை பார்வையிட்டப்பின் இன்று இரவே சென்னை திரும்புகிறார். முதல்வர் பழனிசாமியுடன் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக புயல் பாதிப்பு இடங்களை ஆய்வு செய்வதற்காக நாகை மாவட்டத்துக்கு மக்களோடு மக்களாக முதல்வர் பழனிசாமி ரயிலில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி