ஆப்நகரம்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!!

கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார்.

Samayam Tamil 5 Oct 2018, 9:05 pm
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்துள்ளார்.
Samayam Tamil ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!!
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!!


தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வருகிற 7ம் தேதி கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்று தமிழகத்திற்கு ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட வாரியாக அதிகாரிகள் அனைவரும் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் பட்சத்தில் பேரிடா் மேலாண்மை குழுவினா் உதவிக்கு அழைத்துக் கொள்ளப்படுவா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ரெட் அலர்ட் மற்றும் அரசியல் சூழல்கள் குறித்து விவாதிக்க, இன்று மாலை தமிழக ஆளுநரை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாலை 7 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு குறித்து விளக்கமளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "அக்டோபர் 7.ஆம் தேதி ரெட் அலர்ட் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியோர் உடனிருந்தார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை சந்தித்ததாக தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஆளுநரை சந்தித்திருப்பது அரசியலில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

அடுத்த செய்தி