ஆப்நகரம்

ரஜினி அரசியல் வருகை: எடப்பாடி பழனிசாமியின் கியூட் ரியாக்ஷன்..!

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Dec 2020, 8:22 pm
தமிழகத்தில் 2021இல் சட்ட சபை நடக்கவுள்ள நிலையில் ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை குறித்து அறிவித்துள்ளார். ''அரசியலுக்கு வருவது உறுதி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என ரஜினி 2017இல் அறிவித்ததை போலவே வரப்போகிற சட்ட மன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம் என்று ட்விட்டரில் பதிவிட்டதோடு, ஜனவரியில் கட்சி துவக்க போவதாகவும், அதற்கான தேதியை டிசம்பர் 31இல் அறிவிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
Samayam Tamil edappadi palanisamy


அதற்கு சினிமா துறையினரும், சில அரசியல் கட்சி பிரமுகர்களும் விமர்சனமும், வரவேற்பும் கலந்த கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை குறித்து கருத்து தெரிவித்தார். பன்னீர்செல்வம் கூறியதாவது, '' ரஜினிகாந்த் என்ற குழந்தை இப்போதுதான் பிறந்துள்ளது. அந்தக் குழந்தை வளர்ந்து ஆளாகி வந்தபின் ரஜினி முதல்வர் ஆவது குறித்துப் பார்க்கலாம். எதிர்கால அரசியலில் எதுவும் நடக்கலாம்.

முதலில் ரஜினி கட்சியைத் தொடங்கட்டும். தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து முடிவெடுக்கலாம். அதிமுக என்பது ஒரு ஆலமரம் ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். இதை எவராலும் அசைக்க முடியாது'' என கூறினார்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்!

அவரை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கும் கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சிவகங்கையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியவர், 2ஜி வழக்கில் விசாரணை முடிந்தால் ஆ.ராசா எங்கிருப்பார் என எல்லோருக்கும் தெரியும். கூட்டணி ஆட்சியின் போதே குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் தான் ஆ.ராசா.

2ஜியில் முறையான நடைமுறையை பின்பற்றியிருந்தால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்திருக்கும் என கூறியவர், ரஜினியின் அரசியல் வருகையை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், '' ரஜினி முதலில் கட்சியை பதிவு செய்யட்டும். பிறகு பதில் சொல்கிறேன். அவர் கட்சியை இன்னமும் பதிவு செய்யாததால் என்னால் எதுவும் கூற முடியாது என்றார். தொடர்ந்து ரஜினியை அரசியல் வருகையை ஓபிஎஸ் வரவேற்று இருப்பதை குறித்து கேட்டதற்கு, அது அவருடைய கருத்து என கூறினார்.

அடுத்த செய்தி